Close Menu
    What's Hot

    ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நவம்பர் 1 முதல் வால்பாறையிலும் இ-பாஸ் முறை
    தமிழ்நாடு

    நவம்பர் 1 முதல் வால்பாறையிலும் இ-பாஸ் முறை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    VALPARAI FEATURE compressed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஊட்டி, கொடைக்கானலைப் போல் வால்பாறையில் நவம்பர் 1 ம் தேதி முதல் இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த அறிக்கையில், ஊட்டிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    மேலும், வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம். குழுவினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம். குழுவினருக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்க ஏதுவாக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் என அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 31 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    மேலும், ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை விசாரித்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள். அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1 ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 31 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமின் இணைப்பு, பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை
    Next Article ஈரோடு மலையாளிகளுக்கு பழங்குடியினர் சான்று தந்தது எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    July 17, 2026

    தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து

    July 17, 2026

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..!

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.