Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்
    தமிழ்நாடு

    சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sir
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நடை​பெற்​றது.

    தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

    வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காணும் வகை​யில், இந்த உதவி மையங்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி, சென்னை மாநகரம் முழு​வதும் வாக்​குச்​சாவடி மையங்​களாக உள்ள பள்​ளி​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்​கான உதவி மையங்​கள் தொடங்கி பணி​கள் நடை​பெற்​றன.

    வாக்​குச்​சாவடி நிலைய அலு​வலர்​கள் வாக்​காளர்​களுக்கு கணக்​கீட்டு படிவங்​களை பூர்த்தி செய்​வதற்​கும் உரிய வழி​காட்​டு​தல்​களை​யும், ஆலோ​சனை​களை​யும் வழங்​கினர். பொது​மக்​கள் தங்​களது வாக்​குச்​சாடி மையங்​களாக செயல்​படும் பள்​ளி​களுக்கு காலை முதலே ஆர்​வ​மாக வந்து சந்​தேகங்​களை கேட்​டறிந்​து, படிவங்​களை பூர்த்தி செய்து சென்​றனர்.

    சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளி​லும் இந்த உதவி மையங்​கள் நடை​பெற்​றன. தொடர்ந்து நவ.25-ம் தேதி வரை மொத்​தம் 8 நாட்​களுக்கு இந்த உதவி மையங்​கள் நடை​பெற உள்​ளது. இதுதொடர்​பாக, வாக்​குச்​சாவடி அலு​வலர் கூறுகை​யில், “ உதவி மையத்​துக்கு வருபவர்​கள் பெரும்​பாலும் 2005-ம் ஆண்டு வாக்கு எங்கு இருந்​தது என்​பதை பார்த்து சொல்​லு​மாறு கேட்​டனர். அதற்​கான தகவல்​களை சரி​பார்த்து விண்​ணப்​பங்​களை பூர்த்தி செய்து தரு​கிறோம். இந்த உதவி மையத்தை பொது​மக்​கள் பயன்​படுத்​தி கொள்​ள வேண்​டும்​” என்​று தெரிவித்​தார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
    Next Article அதிமுக பிரமுகர் வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; உறவினரை வலைவீசி தேடும் சிறப்பு புலனாய்வு போலீஸ்
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    குட்நியூஸ்!. இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை!. அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    February 19, 2026

    நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    February 19, 2026

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    February 19, 2026

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.