Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ புதிய ப்ரோமோ ரிலீஸ்..!! விஜய்யின் தரமான ‘கை’ செய்கை..!! கவனிச்சீங்களா..??

    மேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் பெங்காலி மொழி கட்டாயம்.. செப். 1ம் தேதி முதல் அமல்..!!

    டெல்லி போராட்டம்: போலீஸ் தடியடிக்கு திமுக கடும் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; ஊரடங்கு உத்தரவு அமல்!
    உலகம்

    நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; ஊரடங்கு உத்தரவு அமல்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nepal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நேபாளத்தில் ஜென் சி இளைஞர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததன்  காரணமாக அந்நாட்டில் பாரா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு  ஜென் சி இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஊழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் நிலவியதால் கோபமடைந்த இளைஞர்கள் கடந்த செப்டம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக வெடித்ததில் 76 பேர் கொல்லப்பட்டனர்.

    ஆத்திரமடைந்த இளைஞர்கள் நேபாள நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களின் கட்டிடங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். பதற்றமான சூழலையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஷர்மா ஒலி ராஜினாமா செய்ததையடுத்து, அமைச்சர்களும் பதவி விலகினர். இதனையடுத்து சுசிலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்தாண்டு மார்ச் மாதம் நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜென் சி இளைஞர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரா மாவட்டத்தில் மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேவையற்ற அரசியல் பதற்றங்களை தூண்ட வேண்டாம் என்று நேபாள இடைக்கால அரசின் பிரதமர் சுஷிலா கார்கி கூறியுள்ளார். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலோக்கா இண்டஸ்ட்ரி ஹிட்டை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கல்யாணி பிரியதர்ஷன் !!!
    Next Article பண மோசடி வழக்கு: ராபர்ட் வத்ரா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ED!
    Editor TN Talks

    Related Posts

    பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம்: தொழிலாளர் கட்சியில் புதிய தலைமையால் அரசியலில் முக்கிய திருப்பம்

    July 20, 2026

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    July 19, 2026

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ புதிய ப்ரோமோ ரிலீஸ்..!! விஜய்யின் தரமான ‘கை’ செய்கை..!! கவனிச்சீங்களா..??

    மேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் பெங்காலி மொழி கட்டாயம்.. செப். 1ம் தேதி முதல் அமல்..!!

    டெல்லி போராட்டம்: போலீஸ் தடியடிக்கு திமுக கடும் கண்டனம்

    சேத்துப்பட்டு இயற்கை எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

    திமுக எம்.எல்.ஏ கைது விவகாரம்..!! இது உச்சகட்ட அடக்குமுறை..!! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.