Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மருதநாயகம் திரைப்படம் சாத்தியம்தான்: கமல்ஹாசன் உறுதி
    சினிமா

    மருதநாயகம் திரைப்படம் சாத்தியம்தான்: கமல்ஹாசன் உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kamal 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில், மருதநாயகம் திரைப்படம் சாத்தியம் தான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜியில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழா வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் இந்த ஆண்டு இந்திய பனோரமாவின் கீழ் திரையிட தமிழ்நாட்டில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளன. அதன்படி சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, நடிகர் அப்புக் குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ மற்றும் இவி கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ‘ஆநிரை’ என்ற குறும்படம் ஆகியவை இந்த விழாவில் திரைப்பட உள்ளன.

    இதற்காக சென்னையில் இருந்து அமரன் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் விமான மூலம் கோவா புறப்பட்டனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமரன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, திரைப்படக் குழுவினருடன் கோவா புறப்பட்டுள்ளோம்.

    அரசியலில் எப்படி இருந்தாலும் சரி. சினிமா, நாடு என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். நாட்டுக்கு தேவையான படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். இதற்கு நாடு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எங்களுடைய எதிர்பார்ப்பு நியாயமானது தான். இது போன்ற படங்கள் நிறைய எடுக்கப்பட வேண்டும். முப்படைகள் பற்றிய திரைப்படங்களும் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

    பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் செல்லாதது குறித்து கேட்ட போது, ”அரசியல் குறித்தான கேள்வி வேண்டாம். நான் இப்போது சினிமா தொடர்பான நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள செல்கிறேன்” என்றார். மருதநாயகம் திரைப்படம் குறித்து கேட்ட போது, “மருதநாயகம் திரைப்படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில், அதுவும் சாத்தியம் என்பது தான் எனது எண்ணம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனநாயகயன் படத்தின் தெலுங்கு விநியோக உரிமை இவ்வளவுதானா !!! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் !!!
    Next Article டிஎஸ்பி சுந்தரரேசனுக்கு பிடிவாரண்ட் – குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.