Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஜி20 மாநாடு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
    உலகம்

    ஜி20 மாநாடு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜி20 தலைவர்களின் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை (நவ. 21) விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அப்போது இந்திய நடன மற்றும் பாடல் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி உற்சாகமாக கைதட்டி கண்டு ரசித்தார்.

    இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி உரையாற்ற உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாகவும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2022ம் ஆண்டு இந்தோனேஷியாவிலும், 2023ம் ஆண்டு இந்தியாவிலும், 2024ம் ஆண்டு பிரேசிலிலும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுபாயில் தேஜஸ் விமானம் விபத்து: சாகச நிகழ்ச்சியில் சோகம்!
    Next Article அட நம்ம டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டரா இது ; ஆச்சரியத்தில் தமிழ் ரசிகர்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    June 1, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.