Close Menu
    What's Hot

    என் பொண்ணுக்கு கல்யாணம்.. கண்டிப்பா வந்துடுங்க..!! முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அழைத்த குஷ்பூ..!!

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்
    அரசியல்

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நவம்பர் 25 கோவையிலும், நவம்பர் 26 ஈரோட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுப் பணிகளுக்காக கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நவ.25, 26 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நவ, 25 அன்று காலை கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறார். மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    நவ.26 அன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்கிறார்.

    சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவன் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார். இவ்விழாவில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    Next Article கிருஷ்ணகிரி தனியார் நிறுவனத்தில் 52 பணியிடத்துக்கு 2,000 பேர் திரண்டதால் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    என் பொண்ணுக்கு கல்யாணம்.. கண்டிப்பா வந்துடுங்க..!! முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அழைத்த குஷ்பூ..!!

    June 3, 2026

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    June 3, 2026

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    என் பொண்ணுக்கு கல்யாணம்.. கண்டிப்பா வந்துடுங்க..!! முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அழைத்த குஷ்பூ..!!

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.