Close Menu
    What's Hot

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»‘போர் நிறுத்தம் குறித்த திட்டத்தை ஏற்க வேண்டும்’: உக்ரைனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
    உலகம்

    ‘போர் நிறுத்தம் குறித்த திட்டத்தை ஏற்க வேண்டும்’: உக்ரைனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    US
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா அங்கீகரிக்கும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

    இந்தநிலையில், அதிபர் டிரம்பின் சிறப்பு குழுவும், ரஷ்ய அதிகாரிகள் தரப்பும் 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். ரஷ்யா, உக்ரைன் இடையே சமாதானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி தங்களிடம் இருப்பதாக தாங்கள் நினைப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்றும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து ஒருபோதும் உக்ரைனுக்கு வழங்கப்படாது, ரஷ்யா இதுவரை ஆக்கிரமித்துள்ள நிலங்களை உக்ரைன் விட்டுத்தர வேண்டும், உக்ரைன் ராணுவத்தின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ள ஒப்பந்தம் தங்கள் நாட்டை சரணடைய வைப்பதற்கான சூழ்ச்சி என்றே உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.

    நமது வரலாற்றின் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றை எதிர்கொள்ளக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் முக்கிய நலன்களைப் பாதுகாப்பேன் என்றும் அதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் சமாதான ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் புடின் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளநிலையில், நவம்பர் 27ம் தேதிக்குள் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று உக்ரைனை டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘Gratuity பெற ஓராண்டு பணிபுரிந்தாலே போதும்’ – புதிய தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன?
    Next Article ‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்க வேண்டும்’: பிரதமர் மோடி
    Editor TN Talks

    Related Posts

     புதிய உலகளாவிய வரிவிதிப்பு!. டிரம்ப் மீது 25 மாகாணங்களில் வழக்கு!. இந்தியாவுக்கு நிம்மதி!.

    August 4, 2026

    “தப்பியோட கூட நேரமில்லை”!. ரஷ்ய கடற்கரையில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

    August 4, 2026

    ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் முக்கிய முடிவு!. திடீரென தூதரை மாற்றம் செய்து அதிரடி!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.