Close Menu
    What's Hot

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் கிடையாது – அண்ணாமலை விமர்சனம்!
    அரசியல்

    உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் கிடையாது – அண்ணாமலை விமர்சனம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துணை முதலமைச்சராக உள்ள உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லாதது நம்முடைய சாபக்கேடு என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் மெட்ரோ ரயில் கோவைக்கும், மதுரைக்கும் மறுக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பிரதமரை சந்திக்கத் தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது, “பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை. பிரதமர் மோடி கோவை வந்தபோதும், மு.க.ஸ்டாலின் வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் கூட பிரதமர் மோடி வந்தால் சந்திக்க வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், ஒவ்வொருமுறையும் ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சருக்கு கோவை, மதுரைக்கு மெட்ரோ வரக்கூடாது என்ற எண்ணம்தான் உள்ளது. ஆகையால்தான் மெட்ரோ விவகாரத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசு மதுரை, கோவைக்கு மெட்ரோ வேண்டுமென்று கொடுத்த அறிக்கையில் என்ன தவறுகள் உள்ளது என கடிதம் வெளியிட்டுள்ளோம். அது DPR வரைமுறைக்கு உட்பட்டதாக இல்லை. மீண்டும் அதனை சரி செய்து மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

    மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு, “இந்தியா முழுவதும் வரைமுறை வகுக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் பார்வையில் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு செய்யப்படும். அந்தவகையில், தமிழகத்திற்கான நிதி பகிர்வு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மெட்ரோவுக்கு என அதிக நிதி கொடுக்கப்பட்டது தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு தான்” என பதிலளித்தார்.

    மேலும், “ஈரப்பதம் என்பது விவசாயிகளுக்கு எப்போதும் இருக்கும் பிரச்சனை தான். அதிக மழை பெய்தபோது, மத்திய அரசு நெல் ஈரப்பதத்தை 19.5 வரை தளர்த்தியுள்ளது. நெல்லை பாதுகாக்க புதிய குடோன்கள் கட்டவேண்டும். தார்ப்பாய்கள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ரூ.360 கோடி ஊழல் நடந்துள்ளது.

    குறிப்பாக, தயாராக இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய 60 நாட்கள் எடுத்துள்ளனர். உடைந்த அரிசியாக இருந்தாலும், அதனை 5 – 6 % எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், திமுக அரசு ஈரப்பதம் இல்லாமல் நெல்லை காப்பாற்ற தவறிவிட்டது. இதில் முக்கிய குற்றவாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

    மேலும், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதலில் உதயநிதி என்ன பணி செய்தார்? என அவர்கள் கூற வேண்டும். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜே கிடையாது. இது நம்முடைய சாபக்கேடு” என அண்ணாமலை விமர்சித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண் மையக் கதையில் மீண்டும் கல்யாணி!
    Next Article ‘பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்’ – சௌமியா அன்புமணி ஆவேசம்!
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    June 15, 2026

    சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.