Close Menu
    What's Hot

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? – ஓ.பன்னீர்செல்வம் பதில்
    தேர்தல் 2026

    தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? – ஓ.பன்னீர்செல்வம் பதில்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tnm import sites default files OPS PTI 230622 1200
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

    தேனியில் இருந்து சென்னை செல்வதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையம் வருகை தந்தார். ரயில் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தவெக கூட்டம் உள் அரங்கில் நடத்தியது குறித்து கேட்கின்றீர்கள். இதை அக்கட்சி தலைவரிடம் தான் கேட்க வேண்டும். கூட்டத்தில் பேசிய விஜய் மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அவரது கனவு நனவாகட்டும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், “எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதில் விடுபட்டால் மேலும் ஒரு வாய்ப்பாக புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்புள்ளது. படிவங்கள் பூர்த்தி செய்வதில் சிரமம் இருப்பது உண்மை தான். அதை இன்னும் எளிதாக்க வேண்டும். எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

    பீகாரில் எஸ்ஐஆர் தான் வெற்றிக்கு காரணம் என, திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக சொல்கிறீர்கள். அண்ணன் சீனிவாசன் உண்மை தான் பேசுவார். உண்மையை தவிர எதையும் பேசவே மாட்டார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தமிழக மக்களுடைய கருத்தாக உள்ளது” என்று கூறினார்.

    அப்போது ”சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது அவர்களை மிரட்டுகிறார்” என்ற கருத்துக்கு, ”பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்” என்றார்.

    அப்போது செய்தியாளர்கள் ‘மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா?’ என கேட்டதற்கு, “அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்கள் கொள்கையின்படி வாய்ப்பு தர வேண்டும். இணைப்பதற்கு அடிப்படை பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கிற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழ்நாட்டு மக்களின் கருத்து. அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அண்ணாமலை, தினகரன் சந்திப்புக்கு வாழ்த்துகள். செங்கோட்டையன், தினகரன் உடன் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. தினந்தோறும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றோம். அனைவரும் ஒன்றிணைய வாய்ப்பு அதிகம்.

    என்னுடைய ஆதரவாளர்கள் விலகுவது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒருபோதும் என்னை தனிமைப்படுத்துவது நடக்காது. தனிப்பட்ட முறையில் கூறுகிறேன். நாம் பிறக்கும் போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை, இழப்பதற்கு” என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபீகாரை போல தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி காத்திருக்கிறது – அண்ணாமலை
    Next Article வெளுத்து வாங்கும் மழை – எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
    Editor TN Talks

    Related Posts

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    March 31, 2026

    தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?. 5 வருடம் என்ன செய்தார்கள்?. விஜய் பேச்சு!

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!

    CSK-வின் வெற்றி பயணம் தொடருமா?. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருமா KKR?

    Trending Posts

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    April 14, 2026

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    April 14, 2026

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    April 14, 2026

    மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!

    April 14, 2026

    CSK-வின் வெற்றி பயணம் தொடருமா?. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருமா KKR?

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.