Close Menu
    What's Hot

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    பாஜக வலுவடைந்தால் அதிமுக காணாமல் போய்டும்! திருமா எச்சரிக்கை

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து!. நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் – வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அதிரடி !!!
    உலகம்

    அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் – வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அதிரடி !!!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    250901 venezuela Nicolas Maduro ac 507p 5e3633
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடான வெனிசுலா சுமார் 28 மில்லியன் அதாவது 2 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடாகும். உலகின் உயரமான ஏஞ்சல் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சி இங்கு தான் உள்ளது. 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வின் படி வெனிசுலா 33 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வளத்துடன் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டின் வருவாய் பெரும்பாலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் ஈட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்பொழுது விஷயம் என்னவென்றால் வெனிசுலாவில் இருந்து போதைப்பொருட்கள் பசிபிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வழியாக கடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாடி உள்ளது. அதேபோல மறுபுறம் ஜமைக்கா, கியூபா வழியாகவும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    வெனிசுலாவில் இருந்து படகுகள் மற்றும் கப்பல்கள் வழியாக தங்கள் நாட்டுக்கு போதைப் பொருட்கள் வருவதாக கூறி வரும் அமெரிக்கா இதுவரையில் 21 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தென்கரிபிய பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றன. அதில் பெரும்பாலோனார் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டுக்கு எதிராக கடல் எல்லைப் பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. மேலும் வெனிசுலா நாட்டிற்கு எதிராக வான்வெளிகளை மூடப் போவதாகவும் அமெரிக்க அரசு சார்பில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

    7139a7a4aeeea83a0256e49a0931a8b6

    ட்ரம்ப் கூறிய கருத்துக்களை வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ ஏற்றுக்கொள்ளவில்லை. “ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் அனைத்தும் வெனிசுலா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. இது காலனித்துவ அச்சுறுத்தல். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒரு பொழுதும் அடிபணிய மாட்டோம்.

    b3ff277c203098fa59c9b958452077b7b46464e4987cdbc64ab75f697c730813

    இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை தான் எப்பொழுதும் விரும்புவோம். அமெரிக்க அரசு எங்களது ஆட்சியை கவிழ்க்கப்பாக்குகிறது. வெனிசுலா ஒரு பொழுதும் வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும், அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய சாதனைக்கு 41 ரன்களே தேவை.. காத்திருக்கும் ரோஹித்
    Next Article காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!: இலங்கை அதிருப்தி
    Editor TN Talks

    Related Posts

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025

    ஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.

    December 27, 2025

    அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து!. 22,349 விமானங்கள் தாமதம்!.

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    பாஜக வலுவடைந்தால் அதிமுக காணாமல் போய்டும்! திருமா எச்சரிக்கை

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து!. நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு!

    ‘கர்மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் – நடிகர் விநாயகன் கோபம்

    ஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025

    ஆஷஸ் 4வது டெஸ்ட்!. 15 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு!. இங்கிலாந்து வெற்றி!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.