Close Menu
    What's Hot

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»உலகம்»காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!: இலங்கை அதிருப்தி
    உலகம்

    காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!: இலங்கை அதிருப்தி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PAK 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் காலாவதியானவை என தெரிய வந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வரலாறு காணாத அளவில் இலங்கையை கடுமையான சேதத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பையடுத்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.

    வெள்ள பாதிப்பில் இருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ள சுமார் 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையில் நிகழ்ந்த  மிக மோசமான இயற்கை பேரிடர் இது என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இதுவரை 53 டன் அத்தியாவசிய பொருட்களையும், மீட்புப் படையினரையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று, சீனாவும் இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

    இந்தநிலையில், இலங்கைக்கு உதவும் விதமான பாகிஸ்தானும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையின் பேரிடர் காலத்தில் பாகிஸ்தான் துணை நிற்கும் என்று கூறி, இலங்கைக்கு அனுப்பி வைத்த நிவாரண பொருட்களின் புகைப்படத்தை குறிப்பிட்டிருந்தது. இது, தற்போது பேசு பொருளாகி உள்ளது. பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண பொருட்களின் காலாவதி தேதி அக்டோபர் மாதம் 2024ம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவசரகால தேவைக்காக அனுப்பிய பல பொருட்கள் பயன்படுத்த முடியாதவையாகவும், காலாவதியாகவும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை, கவனத்தில் கொண்ட இலங்கையின் பேரிடர் நிர்வாகம் மற்றும் வெளி விவகார துறை, பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தனது அதிருப்தியை தெரியப்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பியது தவறான செயல் என்று பாகிஸ்தான் நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் – வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அதிரடி !!!
    Next Article சிறையில் மன ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் இம்ரான் கான்!- சகோதரி தகவல்
    Editor TN Talks

    Related Posts

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    June 15, 2026

    அடம் பிடிக்கும் இஸ்ரேல்… கேள்விக்குறியாகும் உலக அமைதி… என்னவாகும் போர் நிறுத்த ஒப்பந்தம்?  

    June 15, 2026

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.