Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»சிறையில் மன ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் இம்ரான் கான்!- சகோதரி தகவல்
    உலகம்

    சிறையில் மன ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் இம்ரான் கான்!- சகோதரி தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    imrs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் உள்ள போதும், மன ரீதியாக அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அவரது சகோதரி உஸ்மா கான் குற்றம்சாட்டி உள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73), பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சி நடத்தி வருகிறார். 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இம்ரான் கான் மீது முன்வைக்கப்பட்டன.

    இதையடுத்து, எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். மேலும், பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதனையடுத்த  இம்ரான் கான் மீது  முன்வைக்கப்பட்ட ஊழல் முதல் பல குற்றச்சாட்டுகளில் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இந்த வழக்குகளில் கடந்த 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் உள்ள அவர், கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று தெரியவில்லை என்று இம்ரான் கான் குடும்பத்தினர் கூறி வந்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த சிறை நிர்வாகம், இம்ரான் சகோதரிகளில் ஒருவரான உஸ்மா கானுக்கு அனுமதி வழங்கியது.

    இந்தநிலையில், சிறையில் இம்ரான் கான் உயிருடன் இருப்பதாக உஸ்மான் கான் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருக்கு மன ரீதியான சித்ரவதைகள் தரப்படுவதாக குற்றம்சாட்டினார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுடன் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்று உஸ்மா கான் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் இம்ரான் கானின் உடல்நலம் குறித்த சர்ச்சை ஓய்ந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!: இலங்கை அதிருப்தி
    Next Article ரோஹித் ஷர்மா விளையாடுகையில் நான் பள்ளி மாணவன் – நினைவு கூர்ந்த தெம்பா பவுமா !!!
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    குழந்தைகள் நலக் காப்பகத்தில் பயங்கர தீவிபத்து!. 11 பேர் பலி!. அல்ஜீரியாவில் பெரும் சோகம்! 

    July 16, 2026

    அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பு… ஜே.டி. வான்ஸுக்கு ஈரானின் ரகசிய அறிக்கை..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.