Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“மத அரசியலுடன் தமிழகத்தில் நுழைய முயற்சி” – பாஜக மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்
    அரசியல்

    “மத அரசியலுடன் தமிழகத்தில் நுழைய முயற்சி” – பாஜக மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udaii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “திருப்பரங்குன்றத்தில் சம்பவத்தில், மதத்தை வைத்து அரசியல் செய்து தமிழகத்தில் நுழைந்து விட பாஜக முயற்சி செய்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. மு.கருணாநிதியின் சிலையை திறந்துவைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியது: “தமிழகம் முற்போக்கு மாநிலமாக திகழ்கிறது. திருப்பரங்குன்ற சம்பவத்தில், மதத்தை வைத்து அரசியல் செய்து தமிழகத்தில் நுழைந்து விட பாஜக முயற்சி செய்கிறது. திமுகவின் கடைசி தொண்டர் இருக்கும் வரை, தமிழகத்தில் பாஜகவை நாம் அனுமதிக்க மாட்டோம். தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். விடுபட்ட மகளிர் உரிமைத் தொகை வரும் 12-ம் தேதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

    பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழகமும், நம்பர் ஒன் முதல்வராக மு.க.ஸ்டாலினும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். முதல்வருக்கு அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கொடுப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். இந்த வெற்றி வாய்ப்பை திமுகவினர் உறுதி செய்ய வேண்டும்.

    அடுத்த 3 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தமிழகத்தை பாஜகவுக்கு 10 ஆண்டு ஆட்சியில் அதிமுக வாடகைக்கு விட்டிருந்தது.

    இந்த தேர்தலில் அதிமுகவை தமிழகத்தில் அனுமதித்து விட்டீர்கள் என்றால், பாஜகவுக்கு தமிழகத்தை அதிமுக விற்றுவிடும். பாஜக அடிமையாக அதிமுக உள்ளது. பாஜக கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதில் அதிமுக தீவிரம் காட்டுகிறது.

    அமித் ஷாவின் அடிமைகளாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மாறிவிட்டனர். இதற்கு சரியான பதில் தரும் தேர்தல்தான் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல். திமுக ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகளை கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரையில் இன்று (டிச. 7) முதலீட்டாளர்கள் மாநாடு!
    Next Article புதுச்சேரியில் டிச. 9ல் தவெக பொதுக் கூட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.