Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை: 3 மணிநேரத்தில் மீட்பு
    தமிழ்நாடு

    நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை: 3 மணிநேரத்தில் மீட்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bbbbb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தபட்ட வடமாநிலத்தைச் சேரந்த பெண் குழந்தையை, 3 மணிநேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சன் – முஸ்கா தம்பதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள சவேரியார் தேவாலயம் முன்பு பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக குடும்பத்துடன் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு அவர்கள் வந்துள்ளனர்.

    அப்போது, ரயில் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த ஒருவர், குழந்தைக்கு உணவு வாங்கி தருவதாக கூறி, முஸ்கா உடன் இருந்த சாராவை தூக்கிக் கொண்டு ஓடினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஞ்சன், அவரை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால், அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்த ரஞ்சன் ரயில்வே போலீசாருக்கும், கோட்டார் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில், ரயில்வே போலீஸ்சார் கோட்டார் போலீசாருடன் இணைந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், இளைஞர் ஒருவர் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தையை கடத்திச் சென்றவர் நாகர்கோவில் மீனாட்சிபுரம் காந்தாரி அம்மன் கோயில் தெருவில் குடியிருக்கும் ஒரு தம்பதியினரின் உறவினரான யோகேஷ் குமார் என்பது தெரியவந்தது.

    மேலும், அந்த நபர் வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையுடன் நின்றிருந்த யோகேஷ் குமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் குழந்தையை மீட்ட போலீசார், அதனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கோண்டனர். பின்னர் குழந்தை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட யோகேஷ் குமார்

    தொடர்ந்து, யோகேஷ் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேஷ் குமாருக்கு குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? குழந்தையை விற்பதற்காக அவர் கடத்திச் சென்றாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலை அரவண பாயாசம் – ஒரு முறை வீட்டில் இப்படி செய்து ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்ங்க!
    Next Article ஹைதராபாத்தில் டொனால்ட் டிரம்ப் சாலை!. புதிய பசுமைச் சாலைக்கு ரத்தன் டாடா பெயர் சூட்ட முடிவு!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.