Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை முன்வைத்த ராகுல்!
    இந்தியா

    மத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை முன்வைத்த ராகுல்!

    Editor web1By Editor web1December 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rag
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

    டிசம்பர் 1ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து, டிசம்பர் 9ம் தேதி SIR தொடர்பாக விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மக்களவையில் இன்று (டிச. 9) விவாதம் நடைபெற்றது. காலையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, நடுநிலையான அமைப்பான தேர்தல் ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் சூழல் உருவானது துரதிருஷ்ட வசமானது என குறிப்பிட்டார். SIR விவகாரத்தில் வெளிப்படையான நடவடிக்கைகள்  இருக்கும் வகையில் செயல்பாடுகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதனையடுத்து நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஓட்டுத் திருட்டை விட மிகப்பெரிய தேச விரோத செயல் ஏதும் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். பல்வேறு முறைகேடுகள் நடந்தது குறித்து விளக்கம் கேட்டால் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். பீகாரில் SIR பணிகளுக்கு பிறகு 1.2 லட்சம் போலி வாக்காளர்கள் ஏன் இருந்தார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல்  ஆணையம் விதிமுறைக்கு மாறாக செயல்படுவதாக ராகுல் குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

    தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்வதற்கான தேர்வுக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன் என்றும் கடந்த 2023 டிசம்பர் மாதம் பதவியில் இருக்கும் போது தேர்தல் ஆணையர் பாதிக்கப்படாத வகையில் சட்டத்தை மாற்றியது ஏன் என்றும் ஓட்டுப்பதிவு மையங்களில் உள்ள சிசிடிவிக்கள் மற்றும் தகவல்கள் குறித்த சட்டங்கள் மாற்றப்பட்டது ஏன் என்றும் 3 முக்கிய கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைப்பதாக ராகுல் குறிப்பிட்டார்.

    மேலும், 4 கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். தேர்தல் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, இயந்திரத்தால் படிக்கக் கூடிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்றும் சிசிடிவி பதிவுகளை அழிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மின்னணு வாக்கு இயந்திரத்தின் கட்டமைப்பு குறித்து விளக்க வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாற்ற வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSK 26: வெங்கட் பிரபுவின் இன்ஸ்டா பதிவு வைரல்!
    Next Article சட்டங்கள் மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும்; துன்புறுத்தக் கூடாது!. பிரதமர் மோடி பேச்சு!
    Editor web1
    • Website

    Related Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.