தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
