Close Menu
    What's Hot

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்
    சினிமா

    நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    danushhh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோர் நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    நடிகர் தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ’டி54’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை வருகை தந்தனர்.

    அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநரை கோயில் முன்பு கூடி இருந்தவர்கள் ஆர்வமுடன் வரவேற்றனர். அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பரபரப்பான கதை களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரஜ் வெஞ்சரமூடு நடிகர் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் பதிவிட்டிருந்தார்.

    இந்த திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா முன்னதாக இயக்கிய ’போர் தொழில்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக க்ரைம் த்ரில்லர் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் ஹிந்தி மொழியில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“வா வாத்தியார்” படத்திற்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Next Article தவெகவில் இணைகிறாரா மாஃபா?
    Editor TN Talks

    Related Posts

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.