Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»75வது பர்த்டே கொண்டாடிய ரஜினிகாந்த்.. தலைவர்கள் வாழ்த்து
    சினிமா

    75வது பர்த்டே கொண்டாடிய ரஜினிகாந்த்.. தலைவர்கள் வாழ்த்து

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025Updated:December 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rjjj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் இன்று கேக் வெட்டிக் கொண்டாடினார். அவரது மனைவி லதா ரஜினிகாந்த், இன்று ரீரிலீஸான ‘படையப்பா’ படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துக் கொண்டாடினார்.

    பிரதமர் மோடி: “75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    முதல்வர் ஸ்டாலின்: “ரஜினிகாந்த் – வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்” என தெரிவித்தார்.

    வைகோ வாழ்த்து: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
    “இந்த நாள் மீண்டும் மீண்டும் வரவும், பலப் பல மகிழ்ச்சியை தந்து, வெற்றிகரமான நாளாக அமையவும், நீண்ட ஆயுளைப் பெற்று வாழவும் வாழ்த்துகிறேன்.மேலும், திரைத்துறையில் இன்னும் மிக உயர்ந்த சிகரங்களை அடையவும் வாழ்த்துகிறேன்.”
    இவ்வாறு வைகோ வாழ்த்தினார்.

    அன்புமணி வாழ்த்து: இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும்   நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து  மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாலமானார் சிவ்ராஜ் பாட்டீல்… கார்கே உள்ளிட்டோர் இரங்கல்
    Next Article காங்கிரஸில் விரிசலா?. ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்!.
    Editor TN Talks

    Related Posts

    18 வயதில் விபத்தில் பறிபோன இளம் நடிகையின் உயிர்..!! சோகத்தில் திரையுலகம்..!! யார் தெரியுமா..??

    July 22, 2026

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    July 21, 2026

    தலைமைச் செயலகத்தில் Enjoy Enjami தெருக்குரல் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.