Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில்
    தமிழ்நாடு

    மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    laptop
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது.

    இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக 2025 – 2026 தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

    இதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை ஹெச்.பி., டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது.

    இந்நிலையில், திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி துவக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொல்கத்தா வன்முறை: மெஸ்ஸியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
    Next Article 2026 தேர்தலில் அதிமுகவில் 75 புதுமுகங்களுக்கு வாய்ப்பு… இபிஎஸ் திட்டம்
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.