Close Menu
    What's Hot

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»கொல்கத்தா வன்முறை: மெஸ்ஸியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
    விளையாட்டு

    கொல்கத்தா வன்முறை: மெஸ்ஸியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ma.arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அதன் ஏற்பாட்டு குழுவின் மேலாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனும், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாகவும் அறியப்படும் லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தி கோட் டூர்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார்.

    அந்த வகையில், இன்று கொல்கத்தாவுக்கு வந்த மெஸ்ஸிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள லேக் டவுன் பகுதியில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை, காணொளி வாயிலாக லியோனல் மெஸ்ஸி திறந்து வைத்தார். பின்னர், சால்ட்லேக் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் லியோனல் மெஸ்ஸி பங்கேற்றார்.

    மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். அதேசமயம் மெஸ்ஸியும் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், மைதானத்தை விட்டு வெளியேறினார்.

    மெஸ்ஸி வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுதொடர்பான காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் மேலாளர் சதத்ரு தத்தாவை, கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கொல்கத்தா டிஜிபி ராஜிவ் குமார் உறுதி செய்துள்ளார். முன்னதாக, மைதானத்திற்கு வருகை தந்திருந்த ரசிகர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு மீது அதிருப்தி!. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும், இனி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்!. செல்லூர் ராஜு விமர்சனம்!.
    Next Article மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில்
    Editor TN Talks

    Related Posts

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    August 5, 2026

    TNPL கிரிகெட்: முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

    August 5, 2026

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.