Close Menu
    What's Hot

    ”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக

    லாக்கப் டெத் தற்கொலையாக இருந்தாலும் அரசே முழுப் பொறுப்பு..!! அதிரடி காட்டிய டெல்லி ஐகோர்ட்..!!

    குதிரை பேர விவகாரம்!. செந்தில் பாலாஜி சகோதரர் முன் ஜாமீன் கோரி மனு!. காவல்துறைக்கு கெடு விதித்த நீதிமன்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்னால்தான் கிடைத்தது…. ஜிகே மணி ஓபன் டாக்
    அரசியல்

    அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்னால்தான் கிடைத்தது…. ஜிகே மணி ஓபன் டாக்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    GK Mani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அன்​புமணியை மத்​திய அமைச்​ச​ராக்க நான் பரிந்​துரை செய்​ததையடுத்தே ராம​தாஸ் ஒப்​புக்​கொண்​டார் என்று பாமக கவுரவ தலை​வர் ஜி.கே.மணி தெரி​வித்​தார்.

    இதுதொடர்​பாக அவர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: என்னை துரோகி என்று அன்​புமணி கூறியது வேதனை​யாக இருக்​கிறது. அன்​புமணிக்கு நான் எந்த வகை​யிலும் கெடு​தலோ, துரோகமோ செய்​தது இல்​லை. அன்​புமணி​யின் செயல்​பாடு​களால் தான் ராம​தாஸ் கண்​ணீர் வடிக்​கி​றார். எனது குடும்​பத்​தில் இருப்​பவர்​கள் யாரும் பதவிக்கு வரமாட்​டார்​கள் என்று தெரி​வித்த ராம​தாஸ், அதில் உறு​தி​யாக இருந்​தார். அந்த நேரத்​தில், அன்​புமணி என்​னிடம் வந்து மத்​திய அமைச்​சர் பதவி கேட்க சொன்​னார்.

    நான் ராம​தாஸிடம் பேசி, ‘நீங்​கள் தான் பதவிக்கு வரமாட்​டேன் என்​கிறீர்​கள். உங்​கள் மகனை​யா​வது அமைச்​ச​ராக்​கலாம்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கட்​சி​யின் தலை​வர் என்​ப​தால் உனது விருப்​பத்​துக்கு செயல்​படு​கி​றா​யா. நான் செய்த சத்​தி​யம் என்​ன​வாகும்’ என்று என்​னிடம் கடுமை​யாக கோபப்​பட்​டார். பிறகு, காடு​வெட்டி குருவை அழைத்​துச் சென்று மீண்​டும் ராம​தாஸிடம் பேசினோம். அதன் பின்​னரே, அன்​புமணியை அமைச்​ச​ராக்க ராம​தாஸ் ஒப்​புக்​கொண்​டார். ஒரு​முறை நாடாளு​மன்ற உறுப்​பின​ராக என்னை போக சொன்ன போது கூட, அன்​புமணியை தான் பரிந்​துரைத்​தேன். அன்​புமணியை தான் மாநிலங்​களவை உறுப்​பின​ராக்​கினோம். பாமக தனித்து போட்​டி​யிட்ட போது கூட, அன்​புமணி தான் முதல்​வர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டார்.

    ஆனால், அன்​புமணிக்கு எந்த கெடு​தலும் செய்​யாத என்னை பார்த்​து, அப்​பாவை​யும் என்​னை​யும் ஜி.கே.மணி பிரித்​து​விட்​டார் என அன்​புமணி கூறுகி​றார். தந்தை – மகனை நான் எப்​படி பிரிக்க முடி​யும். ராம​தாஸும், அன்​புமணி​யும் உட்​கார்ந்து பேசி​னால் தான் தீர்வு கிடைக்​கும். வீட்​டுக்​குள் பேச வேண்​டிய விஷ​யத்தை பொது​வெளி​யில் பேசி​யது தான், இவ்​வளவு பிரச்​சினை​களுக்​கும் காரணம். ராம​தாஸை கடுமை​யாக அன்​புமணி விமர்​சனம் செய்​கி​றார். அன்​புமணி மனசாட்​சி​யோடு பேச வேண்​டும். ராம​தாஸுடன் நான் இருப்​ப​தால், என்னை அன்​புமணி விமர்​சனம் செய்து வரு​கி​றார். ராம​தாஸ் பல முறை சிறை சென்​றுள்​ளார். அன்​புமணி எந்த்​தனை முறை சிறை சென்​றார்? பாமக​வில் ஏற்​பட்ட பிரச்​சினைக்கு காரணம் அன்​புமணி மட்​டும் தான். கட்​சி​யில் பிரச்​சினை இருக்​கும் போது, விருப்ப மனு வாங்​கு​வது மோசடி வேலை​யாகும்.

    பாமக நிறு​வனர், தலை​வர் ராம​தாஸ் தான். பாமக​வில் எனக்கு எந்த பதவி​யும் வேண்​டாம். ராம​தாஸ் – அன்​புமணி ஒன்று சேர தயார் என்​றால், நான் கட்​சி​யில் இருந்து விலகி கொள்ள தயா​ராக இருக்​கிறேன். அன்​புமணி யார், யார் துரோகி​கள் என நினைக்​கி​றோரோ, அவர்​கள் அனை​வ​ரும் பாமக​வில் இருந்து வில​கத் தயா​ராக இருக்​கி​றோம். ராம​தாஸ் உடன் அன்​புமணி இணைந்து செயல்பட வேண்​டும். நானோ, என் குடும்​பத்​தினரோ கட்​சி​யில் இருக்க மாட்​டோம். எம்​எல்ஏ பதவியை கூட ராஜி​னாமா செய்து விடு​கிறேன். வேறு எந்த கட்​சி​யிலும் சேர மாட்​டோம். அவர்​களாக அழைத்​தால் மீண்​டும் பாமக​வில் இணை​கி​றோம்.

    வன்​னியர்​களுக்​கான 10.5 சதவீத இடஒதுக்​கீட்டை நான் தான் கெடுத்​த​தாக அன்​புமணி அவதூறாக பேசி வரு​கி​றார். ஆட்சி மாற்​றம் காரண​மாக, அந்த இடஒதுக்​கீடு கிடைக்​காமல் போனது. அதற்கு நான் எப்​படி பொறுப்​பாக முடி​யும். ஆடிட்​டர் குரு​மூர்த்​தி, சைதை துரை​சாமி ஆகி​யோர் ராம​தாஸ். அன்​புமணியை சமா​தானம் செய்​வதற்​காக, தைலாபுரம் தோட்​டத்​துக்கு வந்​தனர். இரு​வ​ரும் ஒன்​றிணைய வேண்​டும் என்​பதே எனது விருப்​பம். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 16.12.2025 | மார்கழி 01
    Next Article டிச.27ல் நாதக பொதுக்குழு கூட்டம்!. முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற சீமான் திட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    ”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக

    July 3, 2026

    “கொஞ்சம் உங்க பக்கத்துல பாருங்க…” – கனிமொழிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

    July 3, 2026

    தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? திருமாவை வலியுறுத்தும் ஆதவ்; சமரசத்திற்கு வராத காங்கிரஸ்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக

    லாக்கப் டெத் தற்கொலையாக இருந்தாலும் அரசே முழுப் பொறுப்பு..!! அதிரடி காட்டிய டெல்லி ஐகோர்ட்..!!

    குதிரை பேர விவகாரம்!. செந்தில் பாலாஜி சகோதரர் முன் ஜாமீன் கோரி மனு!. காவல்துறைக்கு கெடு விதித்த நீதிமன்றம்!

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.