Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»திமுக கூட்டணியில் 16 தொகுதிகளை கேட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
    தேர்தல் 2026

    திமுக கூட்டணியில் 16 தொகுதிகளை கேட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    iuml
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகள் கேட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி ஏ.எம்.கே மஹாலில் மாநில தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குறிப்பாக, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தொடர்ந்து 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளி வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்காளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நீக்கப்பட்டுள்ளார்கள். இதனால் வாக்குரிமை மட்டுமின்றி ஒன்றிய அரசின் சூழ்ச்சி அரசியலான குடியுரிமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை நடைபெற உள்ள புதிய வாக்காளர் பதிவு வெளிநாடுவாழ் வாக்காளர் பதிவு, வாக்காளர் திருத்தம் போன்ற பணிகளில் அதற்குரிய படிவங்களில் மனு செய்து எவருடைய பெயரும் விடுபட்டு விடாமல் முழுமையான கவனத்தை செலுத்த முழு அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கௌரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளின் வசதிக்காக தமிழ்நாடு முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ஹஜ் இல்லத்தை ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு அரசு சார்பில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததற்கும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று குரல் கொடுத்த காயிதே மில்லத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருநெல்வேலியில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணி தொடங்கி வைத்ததற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதன் பின்னர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் இறந்தவர்கள் இரட்டை பதிவு உள்ளவர்களை நீக்கியது சரி தான். ஆனால் இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நம்புகிறோம்.

    திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். அதில் 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்டுள்ளோம்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக திருச்சி கிழக்கு, சென்னை ஆயிரம் விளக்கு, ராயபுரம், வில்லிவாக்கம், பாபநாசம் (தஞ்சை), கடையநல்லூர் ஆகிய தொகுதிகள் அடங்கும்.

    திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது 16 தொகுதிகள் கேட்டோம். அதேபோல் தற்போதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுள்ளோம்” என காதர் மொகிதீன் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை
    Next Article அசாம் அடையாளத்தை அழிக்க முயன்றது காங்கிரஸ்… பிரதமர் மோடி தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.