Close Menu
    What's Hot

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி” – ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
    அரசியல்

    “பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி” – ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025Updated:December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ups
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “தேர்தல் களத்தில் 4 பேர் இருப்பதாக கூறுகின்றனர். இதில், இரண்டு பேர் இதுவரை சட்டமன்றம் செல்லாதவர்கள். ஆகவே, இந்தத் தேர்தலில் போட்டி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் தான்” என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தை வளர்ச்சி அடைந்த முதல் மாநிலமாக மாற்றியவர் பழனிசாமி என்று மக்களே கூறுகின்றனர். தேர்தல் களத்தில் 4 பேர் இருப்பதாக கூறுகின்றனர். இதில் 2 பேர் இதுவரை சட்டமன்றம் செல்லாதவர்கள்.

    ஆகவே, இந்தத் தேர்தலில் போட்டி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் தான். இரண்டு ஆட்சியையும் மக்கள் எடை போட்டுப் பார்க்க வேண்டும். இப்போது விளம்பரத்தாலே பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். காவிரியை காவு கொடுத்ததும் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததும் யார்? காவிரியை மீட்டுக் கொடுத்ததும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் யார் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.

    பழனிசாமி கொண்டு வந்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை ஸ்டாலின் கிடப்பில் போட்டார். அதேபோல 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை கிடப்பில் போட்டார். குடிமராமத்து திட்டத்தை முடக்கினார். ஸ்டாலினின் காலை உணவு திட்டத்தில் தற்போது 40 சதவீத மாணவர்கள் குறைந்துவிட்டதாக அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. இது மாணவர்கள் மீதான அக்கறையில் கொண்டு வந்த திட்டமா… அல்லது விளம்பரத்துக்காக கொண்டு வந்த திட்டமா என்று தெரியவில்லை.

    இந்தியாவிலேயே கடன், பாலியல் வன்கொடுமை, சட்டம் – ஒழுங்குசீர்கேட்டில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றி தலைகுனிய வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மின் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி விட்டனர். வரும் தேர்தலில் உதயநிதியை முதல்வராக அரியணையில் அமர்த்துவதே திமுக-வின் லட்சியமாக உள்ளது.

    நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசின் அறிவிப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் கோரிக்கை என எதையும் செயல்படுத்த மாட்டேன் என்று சர்வாதிகாரியாக ஸ்டாலின் செயல்படுகிறார். தங்களது இயலாமையை நியாயப்படுத்துகிற வகையில் அவதூறு பிரச்சாரங்களை அள்ளித் தெளிக்கின்றனர்.

    திமுக என்ற கொடுமையான வெயிலில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர். விரைவில் பழனிசாமியின் நிழல் மக்களுக்குக் கிடைக்கும். தங்களுக்குப் பணமும் அதிகார பலமும் இருப்பதாக ஸ்டாலின் நினைத்தால் அது பகல் கனவாகிவிடும். பழனிசாமிக்குப் பின்னால் எம்ஜிஆர் – ஜெயலலிதாவின் விசுவாசப் படை இருக்கிறது. தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
    Next Article எகிறி அடிக்கும் தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.640 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.
    Editor TN Talks

    Related Posts

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    July 4, 2026

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    July 4, 2026

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.