Close Menu
    What's Hot

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத் இளைஞர்: பிரதமர் உதவியை நாடி வீடியோ!
    உலகம்

    ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத் இளைஞர்: பிரதமர் உதவியை நாடி வீடியோ!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தான் தாயகம் திரும்ப விரும்பவதாகவும், அதற்காக பிரதமர் மோடியின் உதவியை நாடுவதாகவும் கோரி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு கல்வி, வேலை நிமித்தமாகச் செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

    குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹில் முகமது ஹுசைன் மஜோத்தி. 23 வயதான இந்த இளைஞர், தங்கள் படைகள் வசம் சரணடையும் வீடியோ ஒன்றை கடந்த அக்டோபர் மாதம் உக்ரைன் படைகள் வெளியிட்டது. ரஷ்யாவுக்காக போர் செய்த அவர் உள்ளிட்ட பலர் அந்த வீடியோவில் இருந்தனர். அப்போதே மஜோத்தி இந்திய ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்.

    ஆனால், அதன்பின்னர் அவரைப் பற்றி பெரிதாக செய்திகள் ஏதும் வராத நிலையில், தற்போது தான் தாயகம் திரும்ப இந்திய அரசும், பிரதமரும் உதவ வேண்டியுள்ளார்.

    உக்ரைன் படைகள் தங்களிடம் சரணடையும் படைவீரர்கள் வாழ்வதற்கு வழி செய்யும் வகையில் அவர்களுக்காக ஒரு அமைப்பை வைத்துள்ளது. அதன் மூலம் அவர்கள், அவர்கள் சார்ந்த நாட்டிடம் உதவி கோரலாம். அதன் அடிப்படையில் தான் மஜோத்தி தற்போது இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.

    கடந்த 2024 ஜனவரி 10-ம் தேதி மஜோத்தி, மாணவர் விசாவில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்குள்ள ஐடிஎம்ஓ பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி மற்றும் கலாச்சாரம் படிப்பதற்காகச் சென்றார். ஆனால், சட்டச் சிக்கலில் சிக்கி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. ரஷ்யப் படையில் இருந்த அவரை உக்ரைன் படைகள் சிறைப்பிடித்தன.

    இந்நிலையில், மஜோத்தி தனது குடும்பத்தினருக்கு ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் வீடியோ அனுப்பியுள்ளார். அதில் அவர், “இப்போது நான் உக்ரைனில் போர் குற்றவாளியாக இருக்கிறேன். எனக்கு நம்பிக்கைபோய்விட்டது. என் எதிர்காலம் என்னவாகுமென்று தெரியவில்லை.

    ரஷ்யாவுக்கு கல்வி, வேலைக்காக வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கே நிறைய மோசடி நபர்கள் உள்ளனர். உங்களை கிரிமினல், போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத வழக்குகளில் சிக்கவைப்பர். முடிந்தவரை இதிலிருந்து விலகியிருங்கள்.

    நான் போதைப் பொருள் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றேன். அதிலிருந்து வெளிவர ரஷ்ய சிறையில் இருந்தபோது போர் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இந்திய அரசு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என்னை விடுவிக்கக் கோருகிறேன்.” என்று பேசியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோதையில் கார் ஓட்டிய நபர்.. விபத்தில் சிக்கி காயமடைந்த போதும்… நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை!
    Next Article உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அமைதி திட்டம் குறித்து பேச்சு நடப்பதாக ரஷ்யா தகவல்
    Editor TN Talks

    Related Posts

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    July 5, 2026

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.