Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
    தமிழ்நாடு

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tiger
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 6 நாட்கள் நடைபெறும் மழைக்கு பிந்தைய குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு என்பது புலிகள் எண்ணிகையை கண்டறியும் முக்கிய பணியாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடமபூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி என 10 வனச்சரங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் அந்தந்த வனச்சரகங்களில் பணியாற்றும் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் 2 வேட்டைத்தடுப்பு காவலர்கள் என 4 பேர் கொண்டு அமைக்கப்பட்டது.

    10 வனச்சரகங்களில் மொத்தம் 76 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 304 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப் செயலி, ரேஞ்ச் பைன்டர், காம்பஸ் ஜி.பி.எஸ் கருவி போன்ற கருவிகள் கையாளப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்தில் புலிகள் நடமாடும் பகுதியில் சேகரிக்கப்படும் புலிகள் கால்தடம், எச்சம், கீறல், நேரடியாக பார்த்தல் மற்றும் கேமரா பொருத்தி அதன் வழியாக நடந்து செல்லும்போது புலிகளை பதிவு செய்தல் மூலம் புலிகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    புலிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அவற்றிக்கான தேவையான பாதுகாப்புகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிகப்படுத்துவும் புலிகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதன் வாழ்விடத்தை மேம்படுத்தி, மனித விலங்கு மோதலை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் புலிகள் நடமாடும் பகுதியில் வனத்துறையினர் இன்று 2வது நாளாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமை நடமாடுவதை கண்டு அதனை அதிகாரிகள் வனவிலங்கு கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்தனர்.

    மேலும் அப்போது அந்த நட்சத்திர ஆமையானது சிறுத்தையின் எச்சத்தை உணவாக உட்கொண்டது. நட்சத்திர ஆமைகள், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எச்சத்தை உணவாக உட்கொள்ளும் குணாதிசயம் உடையவை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வுபடி , அங்கு சிறுத்தை, புலிகள் உலாவுவதை உறுதிபடுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘என்னை நம்பி வாங்க..’ – அதிமுக மாஜிக்களுக்கு செங்கோட்டையன் வலை
    Next Article பழவூர் அருகே மாநில மின்னொளி கபடி போட்டி
    Editor TN Talks

    Related Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    July 22, 2026

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    July 22, 2026

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.