Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி Network – அதிமுக கண்டனம்
    அரசியல்

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி Network – அதிமுக கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1000421437
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “ திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில், கூலிப்படை Network, போதைப்பொருள் Network, தற்போது துப்பாக்கி Network என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே? துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது? இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    “உலக நாடுகளுடன் தான் நமக்கு இனிமேல் போட்டி” என்று ஒரு திமுக அமைச்சர் சொன்னாரே- எதில்? Crime Nexus, Gun Network, Drug Mafia… இதில் தானே? அதிலும் சகல நெட்வர்க்கிலும் உச்சியில் நின்று ஆட்டிப் படைப்பது திமுக-வினர் தான் என்பது தான் இதில் Highlight…!! மக்களின் உயிரைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், துப்பாக்கி கலாச்சாரத்தை வளர வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

    கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி உட்பட, குற்றத்தில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம். இன்னும் 3 மாதங்களில் அமையவுள்ள அதிமுக ஆட்சியின் முதல் பணியாக, சட்டம் ஒழுங்கைக் காக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு அளிக்கிறோம். மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை!

    ADMK DMK Edappadi Palaniswami election 2026 MK Stalin tamilnadu politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வீரர்களை பந்தாடிய காளைகள்
    Next Article கண்டெய்னர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.