Close Menu
    What's Hot

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக ஒரு தீய கழகம்!. வைத்திலிங்கத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது!. சசிகலா விமர்சனம்!
    தமிழ்நாடு

    திமுக ஒரு தீய கழகம்!. வைத்திலிங்கத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது!. சசிகலா விமர்சனம்!

    Editor web3By Editor web3January 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sasikala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வைத்திலிங்கத்தின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்று சசிகலா விமர்சித்துள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவைஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். ஆனால், இன்றைக்குதங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது.

    இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும்.

    அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது.

    இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும்தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    புரட்சித்தலைவர் அவர்கள் திமுக ஒரு தீயசக்தி என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம், வரலாறு படைப்போம் என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமறைந்த ஜெயலலிதாவின் வழக்கில் அதிரடி உத்தரவு!
    Next Article நாக தோஷமா..இங்கே ஒருமுறை சென்று வாருங்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    July 19, 2026

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.