Close Menu
    What's Hot

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?
    தமிழ்நாடு

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளின் உறவினர்கள் அமர்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், அந்தப் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால் மருத்துவக் கழிவுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும், நோயாளிகளின் உறவினர்கள் அமரும் பகுதியில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால், அங்கு வருபவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் எழுந்துள்ளது.

    அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகிலுள்ள பள்ளத்தின் வழியாகச் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் அமரும் பகுதியை உடனடியாக சுத்தம் செய்து, மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Chengalpattu GH Chengalpattu Government Hospital government hospital Hospital Hygiene Sanitation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்
    Next Article கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.