Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»19 மணி நேரம் 13 நிமிடங்களை வீணடித்த எதிர்க்கட்சிகள்!. மக்களவை பிப். 9ம் தேதி வரை ஒத்திவைப்பு!.
    இந்தியா

    19 மணி நேரம் 13 நிமிடங்களை வீணடித்த எதிர்க்கட்சிகள்!. மக்களவை பிப். 9ம் தேதி வரை ஒத்திவைப்பு!.

    Editor web3By Editor web3February 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 MPs suspended
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

    அப்போது சீன எல்லை விவகாரம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று பிரதமர் மோடி இல்லாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கமளித்த சபாநாயகர் ஓம். பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை தாக்க சதி செய்யவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், இதனால் நான் தான் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறினேன் என்றும் விளக்கமளித்தார்.

    இருப்பினும், சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததால் நாங்கள் அமளியில் ஈடுபட்டோம் என்றும் கூறிவருகின்றனர். இது நாடு முழுவதும் பேசுப்பொருளானது. இதையடுத்து, நேற்று மாலை 5 மணி அளவில் அவைக்கு சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பதிலுரை வழங்கினார். அப்போதும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “அவை சுமூகமாக நடைபெற வேண்டும். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கமிடுவதற்காக அல்ல. தற்போதைய கூட்டத் தொடரில், இடையூறுகள் காரணமாக 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆளும் கட்சி இருக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர், இப்படிப்பட்ட அவையை என்னால் நடத்த முடியாது என்று கூறினார்.

    தொடர்ந்து மக்களவையில் கூச்சல்-குழப்பம் நிலவியதால் அவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனை தொடர்ந்து மக்களவை 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அவை மீண்டும் வருகிற 9ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article8% ஓட்டு வைத்துள்ள திமுக எப்படி தலைமையேற்க முடியும்?. காங்கிரஸை இழிவாக பேசுவது நல்லதல்ல!. மாணிக்கம் தாகூர் தாக்கு!.
    Next Article அதிமுகவுடன் கூட்டணி இல்லை?. இனி தேமுதிகவுக்கு ரெண்டே ஆப்ஷன்தான்!. என்ன செய்யப்போகிறார் பிரேமலதா?
    Editor web3
    • Website

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.