ராகுல்காந்தி, கார்கேவை விட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பெரிய ஆட்களா என செல்வப்பெருந்தகை காட்டமாக கூறியுள்ளது உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, இது திடீர் பயணம் அல்ல. காங்கிரஸ் கட்சி தலைவர் கார்க்கேவிடம் தமிழ்நாடு கட்சி குறித்து ஆலோசிக்க செல்கிறேன் என்றார்.
மதுரை மாவட்ட கூட்டம் நடந்தது எனக்கு தெரியாது என்று கூறிய செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தலைமை வழிகாட்டின் படி நடப்பது தான் செல்வ பெருந்தகை. கடந்த 17ந் தேதி காங்கிரஸ் கட்சி மேலிடம் யாரும் பொது வெளியில் கூட்டணி பற்றி பேசக்கூடாது. தெளிவாக ராகுல்காந்தி, கார்கே, வேணுகோபால் ஆகியோர் சொல்லி உள்ளனர். இவர்களை விட பெரியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்,
கீரிஷ் சோடங்கர் தலைமையில் கமிட்டி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக அகில இந்திய தலைமை பேசும். பொது வெளியில் எதுவும் பேசக்கூடாது. மாநில தலைமையும் இதை தான் சொல்கிறது. இவ்வளவுகாலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் பேசுவது ஏன? என்று கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை, அறைக்குள் பேசுவதை பொது வெளியில் பேசினால் எப்படி? தாய்-தந்தையாக உள்ள கட்சி தலைமையிடம் பேசுவோம். அவர்கள் வழிகாட்டுதலுடன் தான் நடக்கும். எனக்கு பேச தெரியும் என்பதால் என்னவேண்டுமானாலும் பேச முடியுமா, அதுக்கு எதுக்கு கூட்டணி அதற்கு என்ன முறை என்று குறிப்பிட்டார்.
பிரவீன் சக்கதவார்த்தி, மாணிக்க தாகூர் தொடர்பாக பேச அழைத்து உள்ளார்கள். அதை பேசி ஆலோசிபோம். ஜனநாயகத்திற்கு முரணாக அகில இந்திய தலைமை வழிகாட்டுத்தலுடன் முரணாக யார் நடந்தாலும் தவறு தான் என்றும் அவர் கூறினார்.
