Close Menu
    What's Hot

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக தேர்தல்!. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    தமிழக தேர்தல்!. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3March 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ECI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி வரும் மார்ச் 15 அல்லது 16-ஆம் தேதிகளில் வெளியாகலாம் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைய உள்ளதால், ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனிடையே, தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தத் தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

    தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செலவு செய்யும் தொகைக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்படுவார். இந்த வரம்பைத் தாண்டி ஒரு ரூபாய் கூடுதலாகச் செலவு செய்தாலும், அது தேர்தல் விதிமீறலாகவும் ஊழல் நடவடிக்கையாகவும் கருதப்படும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், முறையான கணக்கு காட்டப்படாத செலவுகள் கண்டறியப்பட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

    பண பலத்தைப் பயன்படுத்தி வாக்குகளைக் கவர்வதைத் தடுக்கும் பொருட்டு, வேட்பாளர்களின் வங்கி கணக்குகள் மட்டுமின்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகளையும் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை தீவிரமாகக் கண்காணிக்கும். சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் அல்லது பெரிய அளவிலான டெபாசிட்கள் கண்டறியப்பட்டால் உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்படும். வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலுக்கெனத் தனியாக ஒரு வங்கி கணக்கை தொடங்கி, அதன் மூலமாகவே அனைத்துச் செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகம் முழுவதும் வரும் 12ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்!. நிர்வாகிகளுக்கு கடிதம்!
    Next Article பீகாரில் ஆட்சி மாற்றம்!. நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் அரசியல் வருகை!
    Editor web3
    • Website

    Related Posts

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    June 10, 2026

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.