Close Menu
    What's Hot

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»என்டிஏ-வில் விஜய் இணைய வேண்டும்!. பாஜக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!.
    தமிழ்நாடு

    என்டிஏ-வில் விஜய் இணைய வேண்டும்!. பாஜக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!.

    Editor web3By Editor web3March 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருவதாகப் பேசப்படுகிறது. ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண், விஜயுடன் நல்ல நட்புறவில் இருப்பதால், அவர் மூலமாக விஜய்க்குத் தூது அனுப்பப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில், திமுக-அதிமுக-நாதக என நான்கு முனைப் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டணி முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்தச் சூழலில், தமிழக பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர் ANS பிரசாத் இன்று (மார்ச் 8, 2026) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ”  தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள என்டிஏ கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திமுகக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார் என்றும், அதனால் பல சிறிய கட்சிகளை இணைத்து பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் பிரசாத் குற்றம்சாட்டினார்.

    அண்மையில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டதால், திமுகவுடன் நீண்ட காலமாக இருக்கும் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய கட்சிகளை சேர்ப்பதற்காக திமுக எடுத்த முடிவுகள், கட்சியில் நீண்ட காலமாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மனவேதனை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதேபோல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஊழல், லஞ்சம், விலையேற்றம் போன்றவை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் என்றும் கூறினார்.மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜனநாயகம் பாதிக்கப்படும் என்றும், அரசை விமர்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    விஜயை நோக்கி பேசிய அவர், திமுகக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.ஓரணியில் திரள வேண்டும் என்றும், உண்மையாக திமுகவை தடுக்க விரும்பினால் அதிமுக–பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.மேலும், தவறான ஆலோசனைகளை நம்பாமல், திமுகக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை!. மூத்த நிர்வாகிகள் அதிருப்தி!
    Next Article காங்., ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு!. மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீர் மயக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    August 7, 2026

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    August 7, 2026

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.