Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்க்கு இன்று 52வது பிறந்தநாள்..!! பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின் வாழ்த்து..!!

    முதல் சுற்றிலேயே பரபரப்பு..!! பேச்சுவார்த்தையை புறக்கணித்து ஈரான் குழு வெளிநடப்பு..!! காரணம் என்ன..??

    டெல்லி ஏர்போர்ட்டில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி..!! காரணம் இதுதானாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.
    தமிழ்நாடு

    “சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.

    Editor web3By Editor web3April 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் அதில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் கட்சித் தலைமை வானதி சீனிவாசனுக்கே மீண்டும் அங்கு வாய்ப்பளிக்க முடிவு செய்ததாலும் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே அண்ணாமலை சமீபத்திய கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரதமரின் கோவை வருகையைப் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுமாறு தலைமை வலியுறுத்தியும், தான் கேட்ட தொகுதி கிடைக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

    இந்தநிலையில், இன்று வெளியாகியுள்ள பட்டியலில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவிநாசி தொகுதியிலும் களம் காண்கின்றனர். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், கட்சித் தலைமையின் முடிவை ஏற்று அவர் தனது தேர்தல் பணியைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நிலவி வந்த வேட்பாளர் தேர்வு தொடர்பான சலசலப்புகளுக்கு இந்தப் பட்டியல் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜகவைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்றத் தன்மை மற்றும் திமுகவின் துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பிரமாண்டமாகவும் ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. நாடு இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழ்நாடு பின்தள்ளப்பட்டுள்ளது.

    ஒரு கட்சித் தொண்டனாக, வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.
    Next Article ஒரு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?. 
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய்க்கு இன்று 52வது பிறந்தநாள்..!! பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின் வாழ்த்து..!!

    June 22, 2026

    முதல் சுற்றிலேயே பரபரப்பு..!! பேச்சுவார்த்தையை புறக்கணித்து ஈரான் குழு வெளிநடப்பு..!! காரணம் என்ன..??

    June 22, 2026

    டெல்லி ஏர்போர்ட்டில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி..!! காரணம் இதுதானாம்..!!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்க்கு இன்று 52வது பிறந்தநாள்..!! பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின் வாழ்த்து..!!

    முதல் சுற்றிலேயே பரபரப்பு..!! பேச்சுவார்த்தையை புறக்கணித்து ஈரான் குழு வெளிநடப்பு..!! காரணம் என்ன..??

    டெல்லி ஏர்போர்ட்டில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி..!! காரணம் இதுதானாம்..!!

    விடிந்ததுமே அதிர்ச்சி..!! திருவள்ளூர் அமோனியா விபத்து.. அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்..!!

    விஜய் முதல்வர் ஆன பின் வரும் முதல் பிறந்தநாள்..!! சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்ப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.