Close Menu
    What's Hot

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!
    இந்தியா

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Editor web3By Editor web3April 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1941295 tollgate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசிய நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தைக் குறைக்கவும், வாகன நெரிசலைத் தவிர்க்கவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ரொக்கப்பணம் பெறுவது முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதுவரை கட்டண விலக்கு கோரி அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்துச் செல்வது வழக்கமாக இருந்தது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

    புதிய விதிகளின்படி, கட்டண விலக்கு பிரிவில் வருபவர்கள் இனி தங்களது அடையாள அட்டைகளைச் சுங்கச்சாவடிகளில் காட்ட முடியாது. அதற்குப் பதிலாக, ‘விலக்கு அளிக்கப்பட்ட பாஸ்டேக்’ (Exempted FASTag) அட்டையை அதிகாரப்பூர்வமாகப் பெற வேண்டும் அல்லது ஆண்டு சந்தா அட்டையை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்களுக்கான ஆண்டு சந்தா கட்டணமாக ரூ3,075 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஒரு ஆண்டில் 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். “கட்டண விலக்கு என்பது குறிப்பிட்ட பதவிக்கானதே தவிர, தனிநபரின் சொந்தப் பயன்பாட்டிற்கானது அல்ல” என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    வாகனங்களில் முறையான பாஸ்டேக் அட்டை இல்லையென்றால், யூபிஐ (UPI) மூலம் கட்டணத்தைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வாறு செலுத்தும்போது சாதாரண கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை யூபிஐ மூலமும் பணம் செலுத்த மறுத்தால், அந்த வாகனம் நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் அல்லது அங்கிருந்து அகற்றப்படும். மேலும், செலுத்தப்படாத கட்டணத்திற்காக மின்னணு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 3 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.
    Next Article இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!
    Editor web3
    • Website

    Related Posts

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    June 23, 2026

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    June 23, 2026

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.