Close Menu
    What's Hot

    போதைப் பொருள் விழிப்புணர்வு ஓட்டம்..! முதல்வர் பங்கேற்பு..!

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!
    சினிமா

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    Editor web3By Editor web3April 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Hansika Motwani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழில் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமண வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஆவணப்படமாக ஒளிபரப்பானது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. குறிப்பாக, இவர்களுடைய காதல் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின்கீழ் ஒரு கனவு திருமண முன்மொழிவைக் காண்பிப்பதில் இருந்து அவர்களின் ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்கள் வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தது.

    ஆனால் திருமணமாகி 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக  பரஸ்பர சம்மதத்தின்பேரில் பிரிந்து கடந்த மார்ச் 11ம் தேதி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்துக்கு பிறகு கோவில் கோவிலாக சுற்றி வரும் ஹன்சிகா, வட இந்தியா தாண்டி விரைவில் தென் இந்திய பகுதிகளிலும் உள்ள கோவில்களுக்கு வருகை தரவிருக்கிறார்.

    இதற்கிடையில் சமீபத்தில் ஹன்சிகா ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில், “இப்போது மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன். தனிமை எனக்கு எப்போதுமே பிடிக்கும். இப்போது அந்த தனிமை மகிழ்ச்சி கலந்து இருக்கிறது. எனக்கானவர்களுக்கு நேரம் செலவிடுவதும், எனக்கு பிடித்தமானவற்றை செய்வதும் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது”, என்றார்.

    மேலும் விவாகரத்து விஷயத்தில் தனது குடும்பத்தினர் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரேமலதாவின் பேச்சால் ஸ்டாலின் அப்செட்!. கூட்டணிக் கட்சிளுக்கு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ கண்டிஷன்!
    Next Article தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்!. அரசு தரப்பு அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    June 25, 2026

    “3 ஆண்டுகளாக நோயால் போராடுகிறேன்…” – நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதைப் பொருள் விழிப்புணர்வு ஓட்டம்..! முதல்வர் பங்கேற்பு..!

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.