Close Menu
    What's Hot

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?
    Featured

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு  முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரைகள், சுவர் விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் என பல்வேறு வகையிலும் அவை பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கான வாக்குரிமை குறித்து எவ்வித முன்னெடுப்பும் எடுக்கப்படுவதில்லை.

    டிசம்பர் 21, 2023 கணக்கெடுப்பின்படி இந்திய சிறைகளில் மொத்தம் 5,30,333 சிறைவாசிகள் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு சிறைகளில் 19,738 சிறைவாசிகள் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கிறது.

    தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மட்டுமே பெரும்பாலும் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றுகின்றனர். மற்றவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தவிர விசாரணை சிறைவாசிகளின் வாக்குரிமையும் பறிக்கப்படுகிறது.

    இந்திய சிறைகளில் உள்ளவர்களில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பேர் விசாரணை சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 80 முதல் 90 சதவீதத்தினர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்படுகின்றனர்.

    சிறைவாசிகள் வாக்களிப்பதை தடுப்பதன் மூலம் அரசியலை கிரிமினல் மயமாவதில் இருந்து பாதுகாக்கலாம் என கருத்து கூறப்பட்டாலும், இன்றைய மக்களவை உறுப்பினர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பலரும் குற்றவழக்குகளை எதிர்கொள்பவர்களாகவே இருந்து வருகின்றனர். இதனால், சிறைவாசிகளின் வாக்குரிமையை பறிப்பதன் மூலம் அரசியல் கிரிமினல் மயமாவதை தடுக்க முடியாது.

    எனவே, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழாவில் சிறைவாசிகளை ஒதுக்கி வைப்பது என்பது ஜனநாயகத்துக்கு முரணானதாகும்.

    உலகின் பிற பகுதிகளில் சிறைவாசிகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை தேர்தல் ஆணையமும் அரசும் அலசி ஆராய்ந்து இந்திய சிறைகளில் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு!. “எவ்வித பயங்கரவாதத்திற்கும் அடிபணியமாட்டோம்”!. பிரதமர் சூளுரை!
    Next Article பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை
    Editor TN Talks

    Related Posts

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    April 22, 2026

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    April 22, 2026

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    “பிரதமர் ஒரு பயங்கரவாதியா?” கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    April 22, 2026

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    April 22, 2026

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.