சென்னையில் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் தனது ஸ்டுடியோவில் ரகசிய காமிரா வைத்து பெண்களைப் படம் பிடித்ததாக பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
தனது வசிகர குரல்மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாதா கிருஷ்ணன், காயல் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
அண்மையில் அவர் அளித்திருந்த பேட்டியில், பாலியல் அத்துமீறல்களில் இருந்து தப்பிக்கவே தான் ரிஷிகேஷில் குடியேறியதாகத் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பாடவேண்டும் என்னும் ஆசையுடன் வாய்ப்புகளைத் தேடியபோது சிலர் தவறான எண்ணத்துடன் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தான் அதற்கு உடன்படாமல் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் வேலை செய்தபோதுதான் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானதாகவும் அவர் பகீர் தெரிவித்துள்ளார். ஸ்டுடியோவில் ரகசிய கேமராக்களை வைத்து அந்த இசையமைப்பாளர் பெண்களை வீடியோ எடுத்ததாகவும், தனது செயல்களுக்கு ஆன்மீகப் போர்வை போர்த்தி நியாயப்படுத்தியதாகவும் ஸ்வாதா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற அத்துமீறல்களில் இருந்து தப்பிக்கவே தான் ரிஷிகேஷில் குடியேறியதாகதாகவும் சினிமாவில் இருந்து விலகி கடந்த 6 ஆண்டுகளாக ரிஷிகேஷில் துணி வியாபாரம் செய்து வருவதாகவும் ஸ்வாதா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
