Close Menu
    What's Hot

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காங்கிரஸ் எம்.பி மீது சாலை ஆக்கிரமிப்பு புகார் – அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    காங்கிரஸ் எம்.பி மீது சாலை ஆக்கிரமிப்பு புகார் – அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksApril 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 CONGRESS MP
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பொது சாலையை காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளாரா என ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஒசூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி. நாயஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிங்காரவேலு முதலியார் தெருவினை நேதாஜி சாலையுடன் இணைக்கும் பொது சாலையினை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வும்,  தற்போதைய எம்.பி.-யுமான கே.கோபிநாத் ஆக்கிரமித்து, இரும்பு கேட் போட்டுள்ளதுடன், கடைகளையும் கட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    பதவி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, வருவாய் மற்றும் நகராட்சித் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறைக்கும் உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.சுந்தரவதனம், கடந்த ஆண்டு ஜூலை 22 மற்றும் 27ஆம் தேதிகளில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, ஓசூர் மாநகராட்சி ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார்.

    இதையடுத்து, பொது சாலையை எம்.பி. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!. மே மாதத்துக்கான நீரை கேட்கும் தமிழகம்!
    Next Article அம்மா உணவகங்களில் மாற்றப்படும் உணவு வகைகள்..! கேஸ் தட்டுப்பாட்டால் மூடப்படும் அபாயம்..!
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    July 4, 2026

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    இறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.