Close Menu
    What's Hot

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»எகிறும் கச்சா எண்ணெய் விலை.. இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு!. ஆபத்தில் இந்திய பொருளாதாரம்?
    இந்தியா

    எகிறும் கச்சா எண்ணெய் விலை.. இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு!. ஆபத்தில் இந்திய பொருளாதாரம்?

    Editor web3By Editor web3April 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Indian Rupee Low
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது. இன்று வர்த்தகத் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு ரூ.95.02 ஆக சரிந்தது, இது இந்திய செலாவணி வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாகும். கடந்த மூன்று வாரங்களாகவே தொடர்ந்து சரிந்து வரும் ரூபாய் மதிப்பு, தற்போது ரூ95-ஐத் தாண்டியுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தக் கடுமையான வீழ்ச்சிக்கு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் போக்கு மற்றும் ஹார்முஸ் ஜலசந்திபகுதியில் நிலவும் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 120 டாலரைத் தாண்டி, 126 டாலர் வரை உயர்ந்துள்ளது. எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகப்படியான டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளதால், ரூபாய் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

    முன்னதாக, மார்ச் மாதத்தில் நிலவிய போர் பதற்றத்தின் போதும் ரூபாய் மதிப்பு ரூ.95-ஐத் தொட்டது. அப்போது ரிசர்வ் வங்கி மேற்கொண்ட சில அதிரடி நடவடிக்கைகளால் சரிவு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் காரணமாக டாலர் வலுவடைந்து வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி மீண்டும் சந்தையில் தலையிடக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்ரீபெரும்புதூரில் பரிதாபம் ;  நுங்கு ஆசையால் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
    Next Article வீழிமங்கலம்: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விமர்சை!
    Editor web3
    • Website

    Related Posts

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    May 2, 2026

    “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.

    May 2, 2026

    கொல்கத்தாவில் 144 தடை உத்தரவு..! வாக்கு எண்ணிக்கையை ஒட்டி முன்னெச்சரிக்கை..!

    May 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    குப்பைக் கிடங்காகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு அடுத்த அடி!. அமேசான் பிரைம் ஒப்பந்தம் ரத்து?. கைகொடுக்குமா Zee5?

    Trending Posts

    தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?

    May 2, 2026

    180-200 இடங்களில் வெற்றி பெறுவோம்!. செங்கோட்டையன் நம்பிக்கை!.

    May 2, 2026

    “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.

    May 2, 2026

    விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!. RR கேப்டன் ரியான் பராக் !

    May 2, 2026

    தவெக வேட்பாளருக்கு எதிரான மோசடி வழக்கு – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.