Close Menu
    What's Hot

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ஆன்மீகம்»பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
    ஆன்மீகம்

    பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

    Editor web1By Editor web1May 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mdu 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

    சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.

    இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை மாநகருக்குள் வந்தடைந்த கள்ளழகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை அளித்து தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில், இன்று (01.05.2026) அதிகாலை தல்லாக்குளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர், பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் இறங்கினார்.

    Mdu 2

    அப்போது மலர்களை தூவி கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் பக்தர்கள் கள்ளழகரை வரவேற்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர். ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என மாநகரின் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. லட்சக்கணக்கானோரின் வருகையால் மதுரை மாநகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீவிரமாக கண்காணித்தனர்.

    2ம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தரும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப நிவர்த்தி அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோல நிகழ்வும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3ம் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெற உள்ளது. 4ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 5ம் தேதி அழகர்மலையை அடைகிறார். 6ம் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹைகோர்ட்டுக்கு கோடை விடுமுறை: சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு!
    Next Article மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!
    Editor web1
    • Website

    Related Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    தாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.