Close Menu
    What's Hot

    ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப் ; பிரான்ஸ் அதிபர் வரவேற்பு

    மகளிர் டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை சுருட்டி வீசிய இந்திய அணி

    FIFA UBDATE: ஏமாற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ; போர்ச்சுகல் – டிஆர் காங்கோ ஆட்டம் டிரா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மணற் கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து – மே 7முதல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
    Featured

    மணற் கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து – மே 7முதல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 LORRY
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி அருகே காவிரி ஆற்றில் நள்ளிரவில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டால்  மே 7-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ​திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரியும், இதில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் மே மாதம் 7-ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    அதே வேளை தொட்டியம் காவல் நிலையம், முசிறி சப் கலெக்டர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

    ​மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்ல. ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.

    ​தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், மணல் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில சமூக விரோத சக்திகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் எல்லைக்குட்பட்ட திருவோங்கிமலை கொக்குவெட்டியான் கோவில் அருகே நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை காவிரி ஆற்றுப்பகுதியில் கரையை  வெட்டி மணல் திருடப்படுகிறது.

    ​தினசரி 70 முதல் 100 கனரக லாரிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக மணல் ஏற்றப்பட்டு கடத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ​

    சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த மணலை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது மட்டும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். உண்மையான மணல் கொள்ளையர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகத் தெரிகிறது.

    இந்தச் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரி ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

    எனவே, இதனைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து வரும் மே மாதம் 7ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மூன்று நாட்களுக்குப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    ​ஊடகங்கள் முன்னிலையில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களையும், நபர்களையும் சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    ​இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 மாதங்களில் ரூ.41 உயர்வு – அதிகரிக்கும் நூல்விலை – அதிருப்தியில் தொழிற்துறையினர்
    Next Article புதிய அரசு அமைந்ததும் பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதியின் பெயர் மாற்றம் – சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் உறுதி
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப் ; பிரான்ஸ் அதிபர் வரவேற்பு

    June 18, 2026

    மகளிர் டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை சுருட்டி வீசிய இந்திய அணி

    June 18, 2026

    FIFA UBDATE: ஏமாற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ; போர்ச்சுகல் – டிஆர் காங்கோ ஆட்டம் டிரா

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப் ; பிரான்ஸ் அதிபர் வரவேற்பு

    மகளிர் டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை சுருட்டி வீசிய இந்திய அணி

    FIFA UBDATE: ஏமாற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ; போர்ச்சுகல் – டிஆர் காங்கோ ஆட்டம் டிரா

    FIFA 2026: பிரான்ஸின் மூன்றாவது உலகக் கோப்பை கனவு நனவாகுமா? – செனகலை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தியது

    இன்று கூடுகிறது தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர்… கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்துகிறார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.