Close Menu
    What's Hot

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்; வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    Featured

    மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்; வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksMay 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 MKstalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தனது எக்ஸ்தளப் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது;-

    கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம்.

    தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.

     திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன்.

    என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

    எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி !

    எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.

    இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – புதிய அரசுக்கு வாழ்த்துகள் – உதயநிதி ஸ்டாலின்!
    Next Article மக்கள் நலனையே முன்னிலையாகக் கொண்டு செயல்படுங்கள் – புதிய அரசுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    May 17, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.