Close Menu
    What's Hot

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»பெரும்பான்மையை நிரூபிக்க தவெக-விற்கு 2 நாட்கள் அவகாசம்!. ஆளுநர் அதிரடி!
    தேர்தல் 2026

    பெரும்பான்மையை நிரூபிக்க தவெக-விற்கு 2 நாட்கள் அவகாசம்!. ஆளுநர் அதிரடி!

    Editor web3By Editor web3May 6, 2026Updated:May 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 days time
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க விஜய்க்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த இடைப்பட்ட காலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவும், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது ஆதரவை திரட்டவும் விஜய் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

    மேலும் விசிக, இடதுசாரிகள் மற்றும் சில சுயேட்சை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், போதிய பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதாவது முதல்வராக பதவியேற்ற 2 நாட்களில் அதாவது மே 9ம் தேதி  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விஜய் தனது அரசின் பெரும்பான்மையை அதிகாரப்பூர்வமாக நிரூபிப்பார். ஆளுநர் வழங்கிய இந்த இரண்டு நாள்  அவகாசம் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகலகலக்கும் திமுக கூட்டணி… அதிர்ச்சியில் அறிவாலயம்!
    Next Article திரைப்படத் தயாரிப்பு, தணிக்கை மற்றும் வெளியீட்டில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – முதலமைச்சராகும் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை.
    Editor web3
    • Website

    Related Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.