Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»விஜய் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு – விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    Uncategorized

    விஜய் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு – விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksMay 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 vijay court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2015ஆம் ஆண்டில் நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனையில், புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்து, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.

    இந்நிலையில், வருமான வரித்துறை சோதனைகளின்போது பெறப்பட்ட ஆவணங்கள், விஜயின் வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரியும் கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்குத் தேவையான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக, அந்த ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்ப உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இந்த மனுவுக்கு எண்ணிடாத பதிவுத்துறை, விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்க, தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட்டது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வு, ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரணைக்கு உகந்ததா என்பதை குறித்து முடிவு செய்வதற்காக எண்ணிடும் பணியை முடிக்காமல் இருக்க கூடாது எனக் கூறி, தவெக தலைவர் விஜய்க்கு எதிரான இந்த மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு உகந்ததா என்ற தலைப்பில், விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    தலைமை நீதிபதி அமர்வு உத்தரவின்படி, தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கின் எண்ணிடும் நடைமுறை முடிந்துள்ளது. வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக-வுக்கு அதிமுகவின் ஆதரவு கிடையாது- கே.பி.முனுசாமி
    Next Article புதுச்சேரி விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் – மீண்டும் ஒரு கூவத்தூரா?
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.