Close Menu
    What's Hot

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தேர்தல் ஆணையம் கறார் – பெரிய கருப்பன் முயற்சிகளுக்கு பின்னடைவு!
    அரசியல்

    தேர்தல் ஆணையம் கறார் – பெரிய கருப்பன் முயற்சிகளுக்கு பின்னடைவு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 periya karuppan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்,  தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரும் மனு மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்த சிவகங்கை – திருப்பத்தூர் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியுமே தவிர, ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இதையே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தபால் வாக்கு, தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்ற புகாருக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது என தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், வேறு தொகுதிக்கு  அனுப்பப்பட்ட தபால் வாக்கை பெற்று, மறு எண்ணிக்கை நடத்தக் கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக, தபால் வாக்குகள், தொகுதி எண், பெயருடன் தான் அனுப்பப்படுகின்றன. அதனால் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இதனால் பெரிய கருப்பனின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரம்பூர் எம்.எல்.ஏவாக விஜய் பதவியேற்பு – தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பில் சுவாரஸ்யம்
    Next Article மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் –  புதிதாகும் தமிழக அரசியல் களம்
    Editor TN Talks

    Related Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.