Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் –  புதிதாகும் தமிழக அரசியல் களம்
    Featured

    மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் –  புதிதாகும் தமிழக அரசியல் களம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2026Updated:May 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 vijay mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிற்பகலில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர்  மே 10ஆம் தேதி காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தவெகவை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

    இதன்பின்னர் விழா மேடையிலேயே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவது, சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் ஒழிக்க சிறப்பு காவல்படை என மூன்று அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

    இதைத் தொடர்ந்து மாலையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இன்று காலை சட்டப்பேரவையில்,  தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள்  தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பிற்பகலில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் மதிமுக நிறுவனர் வைகோவையும் முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

    தமிழக அரசியல் களத்தில் இதுவரை பதவியேற்ற முதலமைச்சர் எதிர்க்கட்சியின் தலைவர் நேரில் சென்று சந்தித்தது இல்லை எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் நிகழ்வுகளின்போது எதிர்பட்டாலும் ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாமல் போகும் போக்கும் நிலவுவதுண்டு.

    ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என  பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவில் கொண்டு அண்ணா உருவாக்கிய திமுகவின் தற்போதைய தலைவரான மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் இன்று சந்திக்க உள்ளதாகவும், இது தமிழ்நாடு அரசியலில் புதிய முன்னெடுப்பு எனவும் கூறப்படுகிறது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், அவர் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.  இதனால் அவரை சட்டமன்றத்தில் சந்திக்க முடியாததால், முதலமைச்சர் விஜய் நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
    மேலும் முதலமைச்சர் விஜய் மதிமுக நிறுவனர் வைகோவை இன்றும், விசிக தலைவர் திருமாவளவனை நாளையும் சந்திக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் ஆணையம் கறார் – பெரிய கருப்பன் முயற்சிகளுக்கு பின்னடைவு!
    Next Article விஜய்க்கு கால அவகாசம் கொடுக்கிறோம் – பிரேமலதா விஜயகாந்த்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.