Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இது புஷ்பா பட பாணியில் ‘சோஃபா’ ஆட்சி!. தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி!. திமுக வெளிநடப்பு!.
    தமிழ்நாடு

    இது புஷ்பா பட பாணியில் ‘சோஃபா’ ஆட்சி!. தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி!. திமுக வெளிநடப்பு!.

    Editor web3By Editor web3May 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “மாற்றம் (CHANGE) என்று கூறிவிட்டு, திரைமறைவில் பரிமாற்றம் (EXCHANGE) செய்து கொண்டிருக்கிறீர்கள்” எனச் சாடிய அவர், ஆட்சியைத் தக்கவைக்க கூவத்தூரை மிஞ்சும் அளவிற்கு அவலங்கள் நடப்பதாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பாணியில் ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அதிமுக-வின் ஒரு தரப்பு ஆதரவு குறித்துப் பேசிய உதயநிதி, “அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு தான் பெரிய ட்விஸ்ட் நடக்கிறது. அந்தப் பிரிவில் இருப்பவர் வீட்டிற்குப் புதிய சோஃபா செல்கிறது, பின்னாடியே புதிய முதலமைச்சரும் போகிறார். இதெல்லாம் பார்க்கும்போது புஷ்பா பட பாணியில் ‘சோஃபா’ ஆட்சி நடைபெறுவது போலத் தெரிகிறது” என சாடினார்.

    “65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி”: 

    தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசுக்கு மக்களிடம் உண்மையான பெரும்பான்மை இல்லை என வாதிட்டார். தமிழகத்தில் பதிவான 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி வாக்குகளை மட்டுமே ஆளுங்கட்சி பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 3.21 கோடி மக்கள் (சுமார் 65%) இந்த ஆட்சியை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “தோல்வி பயத்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இதுவரை வாக்களித்த மக்களுக்கு நன்றி கூட சொல்லவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் தவெக இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

    வாக்குறுதிகள் மற்றும் வெளிநடப்பு: 

    தவெக அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், பெண்களுக்கு அறிவித்த ரூ.2,500-ஐ உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுக்கு 6 சிலிண்டர், குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், பெண்களுக்குப் பட்டுப்புடவை, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்ற நீண்ட பட்டியலை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    “தற்போது தமிழகத்தின் கடன் பற்றிப் பேசி மக்களை நீண்ட காலம் காக்க வைக்காதீர்கள்” எனக் கூறிய உதயநிதி, 106 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கி அரசு நடத்துவதாகக் குற்றம்சாட்டினார். இந்த நியாயமற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை எனத் தெரிவித்து, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அமோக வெற்றி!. 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு!
    Next Article எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு!. பின்வாங்கிய முதலமைச்சர் விஜய்!. ரதன் பண்டிட் நியமனம் வாபஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.