Close Menu
    What's Hot

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!
    தமிழ்நாடு

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    Editor web1By Editor web1May 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    velmurugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எரிபொருள் விலை உயர்வு பாசிச பாஜக அரசின் நிர்வாகத் தோல்வி எனக் கடுமையாக சாடியுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,” சர்வதேசச் சந்தை மற்றும் போர்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் எரிபொருள் விலையை, கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்காகச் சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் கருவியாகப் பயன்படுத்துவது இந்த பாசிச அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது.

    இந்த விலை உயர்வு என்பது வெறும் பெட்ரோல் பங்கோடு முடிந்துவிடுவதல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை இது பலமடங்கு உயர்த்துகிறது. டீசலை நம்பி இயங்கும் இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலை மின் உற்பத்திக் கருவிகளின் செலவு அதிகரிப்பதால், சிறு வணிகர்கள் தங்கள் தொழிலை நடத்த முடியாமல் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிப்பதோடு, வேலையில்லாத் திண்டாட்டத்தையும் தீவிரமாக்குகிறது.

    நாட்டின் இரத்த நாளங்களாகச் செயல்படும் லாரி உள்ளிட்ட சுமையுந்து போக்குவரத்துத் துறை, இந்த டீசல் விலையேற்றத்தால் மரண அடியைச் சந்தித்துள்ளது. வாடகை உயர்வு, உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு எனப் பலமுனைத் தாக்குதலால் லாரி உரிமையாளர்கள் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், ஆட்டோ, வாடகைக் கார் மற்றும் அன்றாடப் பயணங்களை நம்பியுள்ள சாமானிய மக்களின் போக்குவரத்துச் செலவு இருமடங்காக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கானப் பயணங்களையும் பெரும் சுமையாக மாற்றியுள்ளது.

    மக்களின் வியர்வையைச் சுரண்டி, கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புவது ஓர் அரசின் வேலையாக இருக்கக் கூடாது என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.

    எனவே, தொழில்துறையையும், ஏழை எளிய மக்களின் வாழ்வையும் சீரழிக்கும் இந்த எரிபொருள் விலை உயர்வைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்கவேண்டும் – விஜய் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
    Next Article சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து
    Editor web1
    • Website

    Related Posts

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.