Close Menu
    What's Hot

    திமுகவினர் மீது தாக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை  ஜாமீன்

    மீண்டும் ஒரு லாக்டவுன் அச்சம்!. பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!.

    200 யூனிட் இலவசம்!. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை
    தமிழ்நாடு

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

    Editor web1By Editor web1May 16, 2026Updated:May 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tasmac 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அதன் மீது தீர்வு கண்டு அதன் பிறகு சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    டாஸ்மாக் தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்த முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

    Tasmac 3

    ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழிபாட்டுத் தளங்கள், கல்விக் கூடங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் இடைவெளியில் உள்ள சுமார் 717 மதுபான கடைகள் மூட உத்தரவு வழங்கப்பட்டதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த 717 கடைகளை மூடுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும், எவ்வித சட்டத்திருத்தம் கொண்டு வராமல் தற்போது தமிழக முதலமைச்சர் விஜய், 500 மீட்டர் எல்லையை நிர்ணயம் செய்து கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு வழங்கியதால் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Tasmac 1

    தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 3000 மதுபானக் கடைகளை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ய ஏதுவாக அமையும் சூழலால், காவல்துறை கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 124 கடைகளில் 500 மீட்டர் எல்லைக்குள் 63 கடைகள் மூடப்படும் பட்டியலில் உள்ளதாகவும், அதனை மூடிய பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் 61 கடைகள் மட்டும் செயல்படும் போது பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    அதே சமயம் மூடிய கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணிபுரிய உத்தரவு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி-யின் சார்பிலும் மற்றும் பிற சங்கங்கள் அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியான நிலையில் இளைஞர்கள் உட்பட பல்வேறு நபர்கள் தொலைபேசி மூலம் படம் பிடித்து கடை பணியாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வருவதால், கடைகளில் பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மதுபான விற்பனை நடைமுறையை டாஸ்மாக் நிறுவனம் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Tasmac 2

    உடைந்த மதுபாட்டில்களுக்கு கடை ஊழியர்கள் அந்த தொகையை செலுத்தி வருவதாகவும், காலி பாட்டில்களை வைப்பதற்கு மாத வாடகையை கடை பணியாளர்கள் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு செலவினங்கள் கடை பணியாளர்கள் செய்து வருவதை தவிர்க்க புதிய அரசு ஏற்பாடு செய்து, மதுபானங்கள் MRP விலைக்கு விற்பனை செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாக பணியாளர்களை பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!
    Next Article தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?
    Editor web1
    • Website

    Related Posts

    திமுகவினர் மீது தாக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை  ஜாமீன்

    May 16, 2026

    மீண்டும் ஒரு லாக்டவுன் அச்சம்!. பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!.

    May 16, 2026

    200 யூனிட் இலவசம்!. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு!.

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவினர் மீது தாக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை  ஜாமீன்

    மீண்டும் ஒரு லாக்டவுன் அச்சம்!. பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!.

    200 யூனிட் இலவசம்!. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு!.

    தமிழக அமைச்சரவை பட்டியல் – ஆளுநருடன் முதலமைச்சர் தனிச் செயலர் சந்திப்பு

    கூச்சமே இல்லையா உங்களுக்கு ? – எகிறும் ஜோதிமணி எம்.பி

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    May 16, 2026

    திமுகவினர் மீது தாக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை  ஜாமீன்

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.