திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள கடத்தல் கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட பணிகளுடன் வந்த விமானம் தரையிறங்கியது.
விமானப் பயணிகளையும், அவர்களின் ஆவணங்கள் மற்றும் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகக்கிடமாக நடந்து கொண்ட பயணி ஒருவரின் உடமைகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது
அந்த பயணியிடம் இருந்து 5கிலோ எடையுள்ள உயர்ரக ஹைட்ரோ போனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . இதன் சர்வதேச மதிப்பு ரூ.5கோடியாகும்.
இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணி, யாருக்காக கஞ்சாவைக் கடத்திக் கொண்டு வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
